சர்வதேச விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏப்ரல் மாதம் 30 திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. குறித்த தடை தற்போது நீடிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தடை விதிக்கப்பட்ட குறித்த காலப்பகுதியில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து தற்போது குறிப்பிட்ட அளிவிலான விமான சேவைகள் நடைபெற்று வருகின்றன.
அதேநேரம் அங்கீகரிக்கப்பட்ட விமான சேவைகள் மற்றும் சரக்கு விமானங்கள் தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.