இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாத அரசாங்கத்தின் இயலாமை காரணமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கைக்கு எதிராக வாக்களித்த ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் பிற நாடுகளும் பொருளாதாரத் தடைகள் விதிக்க வழிவகுக்கும் என அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே குறித்த தீர்மானம் தொடர்பாக அரசாங்கம் இராஜதந்திர நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சி அழைப்பு விடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால், அது இலங்கைக்கு பாதகமாக அமையும் என குறிப்பிட்ட திஸ்ஸ அத்தநாயக்க, பயணக் கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.