சீனாவின் வளர்ந்துவரும் உறுதிப்பாட்டின் பின்னணியில் பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த அமெரிக்கா- இந்தியா ஆகிய இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன.
அண்மையில் ஜப்பான் மற்றும் தென் கொரியாவை உள்ளடக்கிய மூன்று நாடுகளின் பயணத்தின் இறுதியாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகிய இருவருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவின் வளர்ந்து வரும் உறுதிப்பாட்டின் பின்னணியில் தங்கள் பாதுகாப்பு உறவுகளை உயர்த்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்துள்ளன.
மேலும், இந்தியாவுடனான பாதுகாப்பு கூட்டாண்மை, பிடென்-ஹாரிஸ் நிர்வாகத்தின் முன்னுரிமை என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறியுள்ளார்.
அத்துடன் இந்திய இராணுவம் மற்றும் அமெரிக்க இந்தோ-பசிபிக், மத்திய மற்றும் ஆபிரிக்கா கட்டளைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதேவேளை பிரதமர் நரேந்திர மோடியையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்.எஸ்.ஏ) அஜித் டோவலையும் சந்தித்த ஆஸ்டின், இந்தியா- அமெரிக்க உறவை, ‘சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் கோட்டையாக’வகைப்படுத்தினார்.
குறித்த சந்திப்பு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆஸ்டின் இருவரும் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், சீனாவைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், இரு தரப்பினரும் இந்தியா- சீனா நிலைப்பாட்டை, உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஐசி), பிராந்தியத்தில் சீனாவின் நடவடிக்கைகள் மற்றும் நிலைமை குறித்து விவாதித்துள்ளனர் என்பது தெரிகின்றது.