கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஐந்தாயிரத்து 093பேர் பாதிக்கப்பட்டதோடு 36பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 56ஆயிரத்து 655பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22ஆயிரத்து 826பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 40ஆயிரத்து 360பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 661பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இதுவரை எட்டு இலட்சத்து 93ஆயிரத்து 469பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.