மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு 15 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
மேற்குக் கரை மற்றும் காசாவில் உள்ள மிக அவசரமான, உயிர்காக்கும் மனிதாபிமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த நிதியை சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்திடம் வழங்கப்படவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியின்போது பாலஸ்தீனர்களுக்கான நிதியுதவிகள் இரத்து செய்யப்பட்டன.
எனினும், தற்போது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன், பாலஸ்தீனர்களுடனான உறவை புதுப்பிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
இதன்படி, நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிதியுதவியை பாலஸ்தீனர்களுக்கு அளிக்க தற்போது அமெரிக்கா முன்வந்துள்ளது.
இந்த நிதியுதவி பாலஸ்தீனத்தில் ஸ்திரத்தன்மைக்கு வித்திடும் என்று ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் தாமஸ் கிரீன்ஃபீல்ட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.