தென்னாபிரிக்கா அரசாங்கத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் குழு இணைத் தலைவர் சலீம் அப்துல் கரீம், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் அவர் அளித்துள்ள இராஜிநாமா கடிதத்தில், தொற்று நோய் நெருக்கடியை சமாளிப்பதில் அறிவியலின் முக்கிய பங்கினை கொரோனா நெருக்கடி உணர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உயிரியியல் விஞ்ஞானியான சலீம் அப்துல் கரீம், எய்ட்ஸ் நோய் தொடர்பான தனது ஆராய்ச்சியைத் தொடர்வதற்காக தனது பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்
சர்வதேச அளவில் நற்பெயர் பெற்ற உயிரியியல் விஞ்ஞானியான சலீம் அப்துல் கரீம், கொரோனா தடுப்பு விவகாரத்தில் தென்னாபிரிக்க அரசாங்கத்தின் குரலாக இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.