பிரான்ஸில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை மேலும் உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் ஒருவேளை தேவைப்படலாம் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி ஏற்படலாம் என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதியாகி பிரான்ஸில் 4,791 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது வெள்ளிக்கிழமை நிலவரப்படி 4,766 ஆக இருந்தது என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைரஸின் இரண்டாவது அலையின் போது நவம்பர் மாத நடுப்பகுதியில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
குறிப்பாக பிரான்ஸ் தனது முதல் நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை அமுல்படுத்திய போதும் கிட்டத்தட்ட 7000 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவிவரும் அதேவேளை வெளிநடப்பு செய்யவுள்ளதாக ஆசிரியர்களின் அறிவித்துள்ளமையினாலும் பாடசாலைகளை ஆரம்பிக்கவும் அரசாங்கம் இன்னல்களை சந்தித்து வருகின்றது.
இருப்பினும் மூன்றாவது நாடளாவிய ரீதியிலான முடக்கம் தேவை இல்லை என்ற முடிவை அறிவித்துள்ள மக்ரோன், ஆனால் மேலும் கட்டுப்பாடுகள் தேவைப்படலாம் என கூறியுள்ளார்.