இராணுவ தளபாடங்களை கூட்டாக தயாரிப்பது, ஏற்றுமதி செய்வது சைபர் மற்றும் விண்வெளித் துறைகளின் உளவுத் தகவல் பரிமாற்றத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள இந்தியாவும், தென்கொரியாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவை விரிவுப்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சர், மற்றும் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவிற்கான இராணுவ தளபாட இறக்குமதியில் தென்கொரியா முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.