இந்தோனேசியா அரசாங்கத்துக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பி.டி. பெர்டாமினாவால் இயக்கப்படும் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுக்குப் பிறகு இந்த தீ பரவத் தொடங்கியது என்று செய்தி போர்டல் டெடிக்.காம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்படாத சரிபார்க்கப்படாத காணொளிகள், பெரிய தீப்பிழம்புகள் மற்றும் அடர்த்தியான கருப்பு புகை வானத்தில் மேல்நோக்கி உயருவதை காட்டுகின்றன.
இந்த தீவிபத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. அத்துடன் சேதங்கள் குறித்து உடனடியாக மதிப்பீடு செய்யவில்லை.
அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் வானத்தில் ஒரு பெரிய தீ பிழம்பு ஏற்படுவததை அவதானித்ததாகவும், தீ பிழம்பு ஏற்படுவதற்கு முன்பு ஒரு உரத்த இரைச்சல் சத்தத்தை கேட்க முடிந்ததாகவும் தெரிவித்தனர்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்புகளில் ஒன்று இதுவென அதிகாரிகள் விபரித்துள்ளனர். அதேவேளை பெர்டாமினா அதிகாரிகளை உடனடியாக அணுக முடியவில்லை.