கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்கும் நடவடிக்கை ஏப்ரல் 19 ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அவ்வாறு வழங்குவதற்கு போதுமான அளவு தடுப்பூசிகளை அரசாங்கம் வைத்திருப்பதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரை 8 இலட்சத்து 94 ஆயிரத்து 53 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.