வடக்கு அயர்லாந்தில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் வீட்டுக் கொள்கையிலிருந்து கலப்பு வேலை முறைக்கு மாறலாம்.
தொற்றுநோய்க்கு பிந்தைய திட்டம், நிதித் துறை மற்றும் தொழிற்சங்கங்களால் உருவாக்கப்பட்டு வருகிறது, இது வரும் மாதங்களில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அனைத்து ஊழியர்களையும் தொலைதூர வேலைக்கு மாற்றுவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்மொழியப்பட்ட புதிய கொள்கை, வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாதவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பொதுச் செயலாளர் அலிசன் மில்லர் கூறுகையில், ‘ஒரு சிவில் சர்வீஸ் கணக்கெடுப்பில் கணிசமான எண்ணிக்கையிலான ஊழியர்கள் கலப்பு அணுகுமுறையை ஆதரிப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் அலுவலகத்திலும் வீட்டிலிருந்தும் வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றது. அணுகுமுறை தன்னார்வமாக இருக்க வேண்டும்’ என கூறினார்.