அவசரகால பயன்பாட்டிற்கு இலங்கையில் சினோபோர்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் 600,000 டோஸ் தடுப்பூசி நாளை (புதன்கிழமை)இலங்கையை வந்தடையவுள்ளது.
சினோபோர்ம் தடுப்பூசியை இலங்கையர்களுக்கு செலுத்துவது குறித்து உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்திற்காக அரசாங்கம் காத்திருக்கிறது என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.
இதன் விளைவாக, ஆரம்பத்தில் சினோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கையில் உள்ள சீன நாட்டினருக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
உலக சுகாதார ஸ்தாபனமும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கவில்லை.
4 ஆம் கட்ட மருத்துவ சோதனை குறித்த முடிவுகள் கிடைக்காத நிலையில் தடுப்பூசியை உலகளவில் பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்யவில்லை என அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.