சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் பிரகாரம் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை வலுப்படுத்த கடற்தொழில், கைத்தொழிலை மேம்படுத்தும் வகையில் மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ‘கடலட்டை இனப்பெருக்க நிலையம் இன்று (செவ்வாய்க்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
தேசிய நீர் வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்தின வின் அழைப்பில் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர்இணைந்து குறித்த ‘கடலட்டை இனப்பெருக்க நிலையத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கடலட்டை உற்பத்தியை நேரடியாக பார்வையிட்டதோடு உரிய தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதன் போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.திலீபன்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல்,மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் உற்பட திணைக்கள தலைவர்கள்,அமைச்சின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.