நுண் நிதி கடனில் இருந்து பெண்களை பாதுகாக்க கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக விழிர்ப்புணர்வு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற்குரூஸ் தலைமையில் குறித்த விழிர்ப்புணர்வு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தன் போது பாதீக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொண்ட நுண் நிதி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், இனி வரும் காலங்களில் நுண் நிதி கடன் வழங்குவதை நிறுத்தக் கோரியும் குறித்த போராட்டம் முன் னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் வளர்பிறை பெண்கள் அடைப்பின் மாவட்ட இணைப்பாளர் ரி.பிரியந்தா உற்பட பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.
குறித்த போராட்டம் வடக்கு கிழக்கு உற்பட 17 மாவட்டங்களிலும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.