ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர்களது குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் மீது எதிர்க்கட்சி சுமத்திய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என குற்றம் சாட்டி அக்கட்சிக்கு எதிராக போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில், ‘பஹனட்ட ஆயில்’ தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் தொடர்பாக அக்கட்சியின் செயலாளர் சி.சமரஹேவா தெரிவித்துள்ளதாவது, “அரசாங்கம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், தீவிரவாதம் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு குறித்து அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உட்பட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் நோக்கில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவ்விடயங்களுக்கு அரசாங்கத்துக்கு எங்களது அதரவினை தொடர்ச்சியாக வழங்குவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.