பட்டப்படிப்புக்கு பத்தாயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் 200,000 மனிதவளத்தை இணைத்துக்கொள்வதே இதன் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கணினி தரவு அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல் (Data Scince, Software Engineering) தொடர்பான புதிய தொழில் வாய்ப்புச் சார்ந்த பட்டப்படிப்புக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊகவியலாளர் மகாநாட்டில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி அஜித் ஜீ மதுரபெரும இதனை தெரிவித்தார்.
தற்போதைய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஏற்றவாறு கற்கை நெறி திருத்தப்பட்டுள்ளதுடன், இதனை இணைய வழி தொழில்நுட்பத்தின் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்களை www.vgc.ac.lk. மற்றும் www.ou.ac.lk/bsehons என்ற இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.