கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும், நிலைமை ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் 800 ற்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது 200 பேர் மட்டுமே நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் நாட்டில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணைக்கையை குறைப்பதானது வேண்டுமென்றே தற்கொலை செய்வதற்கு சமம் என்றும் சுதத் சமரவீர சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், நாட்டில் சீரற்ற முறையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனைகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பண்டிகை காலங்களில் முக்கிய இடங்களில் இருந்து வெளியேறும் மக்களுக்கு அன்டிஜென் சோதனைகளை நடத்தப்போவதாகவும் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.