இலங்கையில் நேற்றைய தினத்தில் மட்டும் 211 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்ட ரீதியான தகவலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி கொழும்பில் 70 பேருக்கும் கம்பஹாவில் 25 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 23 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 14 பேருக்கும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறையில் தலா 12 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலையில் 9 பேருக்கும் நுவரெலியா மற்றும் மாத்தளையில் தலா 8 பேருக்கும் காலியில் 7 பேருக்கும் அனுராதபுரத்தில் 5 பேருக்கும் கழுத்துறையில் நால்வருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை கேகாலையில் மூவருக்கும் கண்டி, இரத்தினபுரி, அம்பாறை மற்றும் குருநாகலில் தலா இருவருக்கும் புத்தளம், மட்டக்களப்பு மற்றும் மொனராகலையில் தலா ஒருவருக்கும் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.