பிரேஸிலுடனான எல்லையை தற்காலிகமாக மூடுவதாக பொலிவியா ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ் அறிவித்துள்ளார்.
பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவருவதனால், இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அண்டை நாடான பிரேஸில் உடனான எல்லை தற்காலிகமாக மூடப்படுகிறது.
இதுகுறித்து ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ் கூறுகையில், ‘உயிர் பாதுகாப்பு, மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும் விதமாகவும், தொற்றுநோயின் கண்காணிப்பு நடவடிக்கைள், தொற்று பரவலைக் குறைக்கும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கையாக பிரேஸிலுடனான எல்லையை தற்காலிகமாக மூடப்படுகின்றது.
பொருளாதாரத்தை மூச்சுத் திணறச் செய்யும் நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்பதால் எல்லை மூடல் நீட்டிக்கப்படும் வேளையில், வர்த்தகம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் தினசரி மூன்று மணி நேரத்திற்கு எல்லை போக்குவரத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.