சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த மன்னாரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு, பைப்பர் படகு மூலம் இருவர் வந்தமை தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், விசாரணையின்போது கைதான இருவரும் மன்னார் கடம்பன் பகுதியைச் சேர்ந்தவர்கன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பழனியை சேர்ந்த ஒருவர் வேலை வழங்குவதாகக் கூறி தம்மை தமிழகத்திற்கு வரவழைத்ததாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.