எகிப்து, தனது 22 பண்டைய அரச மம்மிகளை தலைநகர் கெய்ரோ வழியாக எகிப்திய நாகரிகத்தின் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள புதிய தளத்திற்குக் கொண்டுசென்றுள்ளது.
இதன்போது, எகிப்தில் மம்மிகள் கொண்டு செல்வதைக் கொண்டாடும் வகையில் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றுள்ளது.
இந்த மம்மிகள் நேற்று (சனிக்கிழமை) இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், பல மில்லியன் டொலர் பெறுமதியான 18 மன்னர்கள் மற்றும் நான்கு இராணிகளின் மம்மிகளே இடம்மாற்றப்பட்டுள்ளன.
கடும் பாதுகாப்புக்கு மத்தியில், பழைய எகிப்திய அருங்காட்சியகத்தில் உள்ள முந்தைய வீட்டிலிருந்து ஒரு மணி நேர பயணத்தை மேற்கொண்டு மம்மிகள் கொண்டுசெல்லப்பட்டன.
இந்நிலையில், கண்கவர் அணிவகுப்பு சுமார் ஏழு கிலோமீற்றர் தூரத்திலுள்ள புதிய அருங்காட்சியகத் தளம் வரை பேரணியாக நடைபெற்றது. இந்தக் காட்சிகள் நாட்டின் அரச தொலைக்காட்சி, பிற செயற்கைக்கோள் நிலையங்கள் மற்றம் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.