இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் திடீரென அதிகரித்து வருகின்றமை தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டமொன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர், அமைச்சரவை செயலாளர், முதன்மை செயலாளர் மற்றும் ஏனைய முக்கிய அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்கின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்தும் செயற்பாட்டினை மேலும் விரைவுபடுத்தல், கொரொனா நடைமுறைகள் இறுக்கமாக கடைபிடித்தல் ஆகியவை தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.