சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளது.
இதன்போது நக்சலைட்டுகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (சனிக்கிழமை), சத்தீஸ்கர்- பீஜப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களின் எல்லைப் பகுதியிலேயே இந்த துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளது.
மேலும் சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் இன்று கண்டெடுக்கப்பட்டதுடன் மோதலில் காயமந்த ஏனைய வீரர்கள், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை வீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாது அவர்களை தேசம் எப்போதும் நினைவுகூறுமென பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் ஆகியோர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.