இலங்கையில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 581 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93 ஆயிரத்து 392ஆக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் மேலும் 187 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயித்து 208 ஆகப் பதிவாகியுள்ளது.
















