நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சார்பாக அவரது வழக்கறிஞர்களினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்ன கொரயா ஆகிய நீதிபதிகள் இன்று (திங்கட்கிழமை) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
குறித்த மனு எவ்வித சட்டபூர்வமான அடிப்படையும் அற்றது என இதன்போது அர்ஜுன ஒபேசேகர தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தனது நாடாளுமன்ற ஆசனத்தை இரத்து செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கக் கோரி ரஞ்சன் ராமநாயக்க சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.