கொழும்பு மாநகர சபையில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் இலங்கையில் உள்ள சீன நாட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அதன்படி, கொழும்பு துறைமுக நகரத்தில் பணிபுரியும் 1000 சீன பிரஜைகளுக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்படுவதாக அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
சீனா நன்கொடையாக வழங்கிய 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் கடந்த வாரம் இலங்கைக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.