நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள எப்லடொக்சின் அடங்கியுள்ள தேங்காய் எண்ணெயினை மீண்டும் மலேசியாவுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எப்லடொக்சின் அடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள 5 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களையே நாளை (செவ்வாய்க்கிழமை) மலேசியாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனியார் நிறுவனங்களினால் இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களிளேயே எப்லடொக்சின் என்ற பதார்த்தம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை ஒரு பில்லியன் தேங்காய் எண்ணெய் துகள்களில் 10 க்கும் மேற்பட்ட எப்லடொக்சின் துகள்கள் இருந்தால், அது மனித உடலுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.