நியூபோர்ட்டில் ash dieback நோயால் பாதிக்கப்பட்ட மொத்தம் 8,600 மரங்கள் வெட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர சபை இதை ஒரு ‘பேரழிவு தரும் வான்வழி நோய்’ என்று முத்திரை குத்தியதுடன், அதன் நிலத்தில் வெட்டப்பட்ட ஒவ்வொன்றிற்கும் இரண்டு மரங்களை நடவு செய்வதாகக் கூறியது.
கேர்லியன் வீதியில் உள்ள வனப்பகுதியில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
இதேவேளை, வெஸ்டன்பேர்ட் ஆர்போரேட்டமில் ash dieback நோயால் பாதிக்கப்பட்ட 5,000 மரங்களை வெட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல் சுதந்திரச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டதைத் தொடர்ந்து உள்ளூர் ஜனநாயக அறிக்கை சேவைக்கு வெளியிடப்பட்ட விபரங்களின்படி, இந்த வேலைக்கு நியூபோர்ட் நகர சபைக்கு 8.3 மில்லியன் பவுண்டுகள் செலவாகும்.
ash dieback, ஒரு பூஞ்சையால் தூண்டப்படுகிறது. முதலில் கிழக்கு ஆசியாவில் இனங்காணப்பட்ட நோய், 2012ஆம் ஆண்டு பிரித்தானியாவிற்கு பரவியது.