2020 ஆம் ஆண்டில் அரசாங்கம் கடன் வரம்பை ஒருபோதும் மீறவில்லை என மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பு மற்றும் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப செயற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2020 ஆம் ஆண்டில், நாட்டில் எழுந்த நிலைமைக்கு ஏற்ப ஜனாதிபதி அரசியலமைப்பின் படியே செயற்பட்டார் எனவும் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இன்னும் நாட்டில் காணப்படுகின்ற நிலையில், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் எனவும் அஜித் நிவாட் கப்ரால் எதிர்க்கட்சியை கேட்டுக்கொண்டார்.