பிரான்ஸில் மூன்றாம் கட்ட கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்தக் கட்டுப்பாடுகளின் போது, காலை 6 மணியில் இருந்து மாலை 7 மணி வரை உங்கள் வீட்டில் இருந்து 10 கி.மீ தூரமே பயணிக்க முடியும். இதற்கு உங்களிடம் புதிய அனுமதி பத்திரமும், உங்கள் வீட்டு முகவரி கொண்ட அடையாள பத்திரமும் இருக்கவேண்டும்.
பாடசாலைகள், கல்லூரிகள், உயர்கல்வி அனைத்தும் மூடப்படுகின்றன. நிபந்தனைகளுடன் பல்கலைக்கழங்கள் திறக்கப்படுகின்றன. அனைத்து பொழுதுபோக்கு மையங்களும் மூடப்படுகின்றன.
முதியோர் நிலையங்கள், மருத்துவ காப்பகங்களுக்கு செல்வோருக்கு அனுமதி உண்டு. வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி உண்டு.
இரவு 7 மணிக்குப் பிறகு உங்கள் செல்லப்பிராணியை வெளியே கொண்டு செல்ல அனுமதி உண்டு. வெளி இடங்களில் 6 பேருக்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூட தடை. பொது வீதிகள், வீதிகளில் மது அருந்துவதற்கும் தடை.
குடும்ப ஒன்றுகூடல்கள், தனியார் ஒன்றுகூடல்கள் அனைத்துக்கும் தடை. மாகாணம் விட்டு மாகாணம் செல்ல முற்றாக தடை. பொது சேவைகள் திறந்திருக்கும்.
வங்கிகள், தபால் நிலையங்கள் திறந்திருக்கும். மதுபானசாலை, தேநீர் அருந்தகம், உணவங்கள் மூடப்பட்டிருக்கும்.
அத்தியாவசிய வணிகங்கள் திறக்கப்படும். முடி திருத்தும் நிலையங்கள் திறக்க அனுமதி உண்டு. பூக்கடைகள் திறக்க அனுமதி உண்டு. ஆடை விற்பனை கடைகள், வாசனை திரவியங்கள் விற்பனை கடை, நகைக் கடைகள் மூடப்படும். அழகு நிலையங்கள் திறக்க அனுமதி இல்லை.
அருங்காட்சியங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு பொருட்கள் விற்பனை கூடம், விளையாட்டு அரங்குகள் அனைத்தும் மூடப்படும்.
பொது போக்குவரத்துக்கள் பேருந்து, ட்ராம், மெற்றோ, தொடருந்து ஆகியவை வழமை போல் இயங்கும். வாடகை கார்கள் இயங்கும்.
முக்கிய பொது நிகழ்வுகள், கண்காட்சிகள், விற்பனை திருவிழா கூடங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையங்களுக்கும் மாலை 7 மணி வரை மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளியில் செல்ல கண்டிப்பாக அனுமதி பத்திரம் வேண்டும். கட்டாயமாக வீட்டு முகவரி கொண்ட அடையாள அட்டை வேண்டும். அனைத்து இடங்களுக்கும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
கட்டுப்பாடுகளை மீறுவோருக்கான அபாரதத் தொகை 135 யூரோக்களில் இருந்து ஆரம்பிக்கின்றது.