ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட வேண்டும் எனவும், அதற்கு அரசியல் தீர்வுகாணப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்ய அமைச்சர் செர்கேய் லாவ்ரோவிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பு டெல்லியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வருடாந்திர உச்சிமாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜெய்சங்கர், அணுசக்தி, விண்வெளி, இராணுவம் ஆகிய துறைகளில் இந்தியா, ரஷ்யா இடையேயான நீண்டகால ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்திய – பசுபிக் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டையும் ரஷ்ய அமைச்சரிடம் அவர் தெரிவித்துள்ளார்.