விடுதலைப் புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து தேசியமற்றும் சர்வதேச ரீதியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறினார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை 97 பேர் அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் 36 விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
அரசாங்கம் யாரையும் பாதுகாக்கவோ குற்றங்களை மூடி மறைக்கவோ முற்படவில்லை என குறிப்பிட்ட அவர் சட்டமா அதிபரே மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
பயங்கராவத செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டத்திட்டங்களை கொண்டுவர வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.