உக்ரேனின் கிழக்கு எல்லையில் ரஷ்யாவின் அதிகரித்த இராணுவ இருப்புக்கு மத்தியில் உக்ரேனுக்கு ஆதரவளிக்கும் ஒரு திட்டமாக, அடுத்த சில வாரங்களில் கருங்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்புவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகின்றது.
இந்த விடயம் ரஷ்யாவிற்கு ஒரு நேரடி செய்தியாக இருக்கும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1936ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் கருங்கடலுக்குள் நுழைவதற்கான அதன் நோக்கம் குறித்து வொஷிங்டன் 14 நாட்கள் அறிவிப்பு வழங்க வேண்டும்.
ஆனால், அறிவிப்பு இன்னும் அனுப்பப்பட்டதா என்பது தெளிவாக இல்லை. எனினும், புதன்கிழமை, இரண்டு அமெரிக்க பி-1 தாக்குதல் கப்பல்கள் ஏஜியன் கடல் பகுதியை நோக்கி தங்களது பயணங்களை மேற்கொண்டுள்ளன.
இதனிடையே, ரஷ்ய கடற்படையின் நடவடிக்கைகள் மற்றும் கிரிமியாவில் துருப்புக்களின் நகர்வுகளை கண்காணிப்பதற்காக, அமெரிக்க கடற்படை கருங்கடல் பகுதியில் உள்ள சர்வதேச வான்வெளியில் உளவு கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
உக்ரேன் அருகே ரஷ்யா இராணுவ பயிற்சியில் ஈடுபட்டது. இது உக்ரேனின் கிழக்கு எல்லை பகுதியான டான்பாஸ் மாகாணத்தை கைப்பற்ற எடுக்கும் முயற்சி என கூறி உக்ரேன் எல்லை அருகே படைகளை குவித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ரஷ்யாவும் படைகளை குவித்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகின்றது.