பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.மாநகர சபையின் காவல் படை விவகாரம் தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட முதல்வரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து சுமார் 6 மணி நேரம் கடுமையான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இன்றைய தினம் அதிகாலை 2 மணியளவில் முதல்வரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முதல்வரை அதிகாலையே வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு சென்ற சட்டத்தரணிகள் , முதல்வரை சந்திக்க கோரிய போது , அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அந்நிலையில் சட்டத்தரணிகள் எழுத்து மூல அனுமதி கோரி முதல்வரை சந்திப்பதற்காக காத்திருக்கிறனர்.