60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியை போர்த்துகல் பரிந்துரைக்கும் என்று சுகாதார ஆணையம் டிஜிஎஸ் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஹென்ரிக் மெலோ, இந்த முடிவு தடுப்பூசி செலுத்தலின் சிறிய தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என கூறினார்.
ஏற்கனவே சுமார் 4 இலட்சம் அளவு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இருப்பினும் தடுப்பூசியின் பாதுகாப்பு கருதி, இனி வரும் நாட்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்கவிளைவுகள் ஏற்படுவது மிகவும் அரிதான நிகழ்வு தான் என்பதால், ஏற்கனவே அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்திற்குள் போர்த்துகல் மேலும் 1.4 மில்லியன் அஸ்ட்ராஸெனெகா அளவைப் பெறும் என்று எதிர்பார்க்கிறது. போர்த்துகல் ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளையும் பயன்படுத்துகிறது.