இங்கிலாந்தில் கடந்த மார்ச் மாதத்தில் கொவிட்-19 நோய்த்தொற்றுகள் சுமார் 60 சதவீதம் குறைந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
லண்டனில் இயங்கும் இம்பீரியல் கல்லூரியில் உள்ள ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வின் முடிவில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஆரம்பத்தில் வயதானவர்களை மையமாகக் கொண்ட தடுப்பூசி திட்டத்தால் அவர்கள் அதிகம் பயனடைந்ததால் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றுகளுக்கும் இறப்புகளுக்கும் இடையிலான உறவு வேறுபடுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கொரோனா கட்டுப்பாடுகள் நோய் பரவும் தன்மையை குறைத்துள்ளது. கொரோனா தடுப்பூசி பணி செலுத்துவதன் காரணமாக நோய் பரவல் மற்றும் நோயின் தீவிரம், மருத்துவமனைகளில் இறப்பு வீதம் ஆகியவை பெருமளவு குறைந்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.