நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி சமுர்த்தி வங்கியின் அணுசரனையுடன் கிராமிய மட்ட உற்பத்தியாளர்களின் புதுவருட சந்தை கண்காட்சி பிரதேச செயலக முன்றலில் நேற்றும் இன்றும் (வெள்ளிக்கிழமை) இரு நாட்களாக நடைபெற்றது.
இந்நிகழ்வானது கிராம மட்ட சிறு உற்பத்தியாளர்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்துவருவதுடன் அவர்களுக்கான சந்தை வசதிகளையும் ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில் அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட சிறு உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் ஆரம்பமான இந்தக் கண்காட்சியில் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.லதாகரன், நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளராக கே.ரிஸ்வி யஹ்சர், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிவம், சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எச்.எம்.ஏ அலீம், சவளக்கடை சமூர்த்தி வங்கி முகாமையாளர் ஏ.ஜினேந்திரன் , உட்பட சமுர்த்தி திணைக்களத்தின் தொழில்நுட்ப பிரிவு உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.