முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலான குற்றங்களுக்கு தண்டனை விதிக்கும் எந்தவொரு சட்ட விதிகளும் நாட்டில் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சரத் பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான உலகளாவிய சூழ்நிலைகள் வேறுபட்டவையாவையாகும்.
இந்தியாவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சட்டத்தரணி ஒருவருக்கு, இந்திய ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
எனினும் அவர் அபராதம் செலுத்த மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இலங்கையில் அவ்வாறான விடயத்துக்கு தண்டனை வழங்குவது தொடர்பாக எந்ததொரு சட்டமும் இல்லை.
அவ்வாறிருக்க ரஞ்சன் ராமநாயனுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளமையை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.