மெக்ஸிகோவில் சனிக்கிழமையன்று 2,192 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் இறப்புகளைப் பதிவாகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு பதிவாகிய அதிகளவிலான இறப்பு எண்ணிக்கை இது என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை சமீபத்திய வாரங்களில் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்ட நாளாந்த சராசரி எண்ணிக்கையினை விட மிக அதிகமாக காணப்படுகின்றது.
அந்தவகையில் பதிவாகிய 2,192 இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு 2020 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாகவும் அந்த நேரத்தில் கொரோனா வைரஸ் இறப்பு எனக் குறிப்பிடப்படவில்லை என்றும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி மெக்ஸிகோவின் மொத்த இறப்பு 209,212 ஆக உயர்ந்துள்ள அதேவேளை, அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது மிக உயர்ந்த இறப்பு எண்ணிக்கை பதிவாகிய நாடாகவும் காணப்படுகின்றது.