கொரோனா தொற்றுக்கு மத்தியில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் நடந்துகொண்ட விதம் வருத்தமளிப்பதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர கவலை வெளியிட்டுள்ளார்.
பொதுமக்களின் இந்த நடத்தைகளின் விளைவாக கடுமையான எதிர்மறையான தாக்கம் எதிர்காலத்தில் வெளிப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சுகாதார ஆலோசனையைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தற்போது பொறுப்பற்ற வாழ்க்கை முறையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் சுதத் சமரவீர சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமை தொடர்ந்தால் சுகாதார விதிமுறைகளை கடுமையான முறையில் செயற்படுத்த வேண்டி ஏற்படும் என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர எச்சரித்துள்ளார்.
இதேவேளை தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்குவது தொடர்பான இறுதி முடிவை அடுத்த வாரம் சுகாதார அமைச்சு அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.