இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 221 பேர் குணமடைந்துள்ளனர்
இதற்கமைய குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 92,832 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் பதிவாகிய மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்து 186 ஆக காணப்படுகின்றது.
மேலும் வைரஸ் தொற்றினால் இதுவரை 615பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














