ஒன்றாரியோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோய்க்கு எதிராக போராடுவதற்கு அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்பபட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டமைப்பில் உள்ள சிக்கலைச் சமாளிக்க உதவ, 620 சுகாதாரப் பணியாளர்களை அனுப்புமாறு ஒன்றாரியோவிலிருந்து வந்த கடிதத்திற்கு பதிலளித்த அல்பர்ட்டா, தங்களது சொந்த மாகாணத்திற்கு இப்போது முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இதுதொடர்பாக ஜேசன் கென்னியின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த நேரத்தில் எங்கள் சுகாதாரப் பணியாளர்களை மாகாணத்திற்கு வெளியே அனுப்பும் நிலையில் நாங்கள் இல்லை. எங்கள் முன்னுரிமை அல்பர்ட்டா மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கொவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க எங்கள் மருத்துவமனைகள் போதுமான பணியாளர்களாக இருப்பதை உறுதி செய்வதாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.