அரசாங்கத்தின் பங்காளி கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.
குறித்த கூட்டம் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் சட்டம் குறித்து அரசாங்கத்தின் பங்காளி கட்சி தலைவர்களுக்கிடையில் பொது இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
அத்துடன் மாகாண சபை தேர்தல் சட்டம் தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ள கட்சிகளுக்கிடையில் வெவ்வேறு விதமான நிலைப்பாடு காணப்படுகின்றமையினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மே தினக் கூட்டத்தொடர் மற்றும் துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் குறித்தும் அவதானம் செலுத்தப்படலாம் என அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.