வவுனியா – ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவ அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுமதிப்பத்திரம் இன்றி மரக்கட்டைகளைக் கொண்டுச் சென்ற கெப் ரக வாகனமொன்றை இராணுவத்தினர் தடுத்து நிறுத்த முற்பட்டபோது, அவர்கள் மீது வாகனம் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மேலும் விபத்துடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த இரு இராணுவ அதிகாரிகளும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தப்பிச் சென்ற சந்தேகநபர்களைத் தேடும் நடவடிக்கையில் ஓமந்தை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.