ஆண்டின் இறுதியில் புதிய சுற்று சர்வதேச பேச்சுவார்த்தைக்கு முன்னர் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வலுவான உறுதிமொழிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என சீனாவும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளன.
கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஷாங்காயில் சீன காலநிலை தூதுவர் ஸீ ஜென்ஹுவா மற்றும் அவரது அமெரிக்க பிரதிநிதி ஜோன் கெர்ரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் சீனாவும் காலநிலை நெருக்கடியை சமாளிக்க ஒருவருக்கொருவர் மற்றும் பிற நாடுகளுடன் ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ளன என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் அமெரிக்க அதிகாரி ஒருவர் சீனாவிற்கு மேற்கொண்ட முதல் உயர்மட்ட விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வணிகங்களை நியாயமற்ற முறையில் தண்டித்ததாகக் கூறி, டொனால்ட் ட்ரம்பின் அரசாங்ககம், இருதரப்பு விவாதங்களை நிறுத்தியதுடன் 2015 பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.