ஏப்ரல் 24 முதல் பிரேசிலில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் பிரான்ஸ் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறையினை அமுல்படுத்தும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பிரேசிலில் இருந்து வரும் மற்றும் புறப்படும் அனைத்து விமான சேவைகளையும் நிறுத்த இந்த வாரம் பிரான்ஸ் முடிவு செய்தது.
இந்த நடவடிக்கை ஏப்ரல் 23 வரை நீடிக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அதே அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 24 முதல், பிரான்ஸில் வசிக்கும் அல்லது பிரெஞ்சு அல்லது ஐரோப்பிய ஒன்றிய கடவுசீட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்படும்.
அவ்வாறு வரும் அனைத்து பயணிகளுக்கும் அரசாங்கம் 10 நாள் தனிமைப்படுத்தலை விதிக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, அங்கீகரிக்கப்பட்ட பயணிகள் 36 மணிநேரத்திற்குள் எடுத்த பி.சி.ஆர். அறிக்கையை கையளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆர்ஜென்டினா, சிலி மற்றும் தென்னாபிரிக்காவிலிருந்து திரும்பும் மக்களுக்கும் ஏப்ரல் 24 ஆம் திகதிக்குள் இதே நடவடிக்கைகள் படிப்படியாக அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.