ஐரோப்பாவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலாவதாக இருக்கும் பிரான்ஸில் நேற்று மட்டும் 35 ஆயிரத்து 861 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அதன்படி மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 52 இலட்சத்து 60 ஆயிரத்து 182 ஆக உயர்ந்துள்ள அதேவேளை மேலும் 189 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 1 இலட்சத்து 593 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை ஜேர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 20 ஆயிரத்து 957 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் புதிதாக 139 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை அடுத்து மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 31 இலட்சத்து 37 ஆயிரத்து 907 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்து 526 ஆகவும் அதிகரித்துள்ளன.
இத்தாலியில் மேலும் 15 ஆயிரத்து 370 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதுடன் புதிதாக 310 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 38 இலட்சத்து 57 ஆயிரத்து 443 ஆகவும் இறப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 676 ஆகவும் உயர்ந்துள்ளது.