நடிகை நயன்தாரா லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான லூசிபர் திரைப்படம் பெறும் வெற்றியடைந்துள்ள நிலையில், இந்த திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். மோகன் ராஜா இயக்கவுள்ளார். சுமார் 200 கோடி ரூபாய் செலவில் திரைப்படம் எடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் முதலமைச்சர் மகளாக நடிப்பதற்கு நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கால்ஷீட் பிரச்சினைகள் காரணமாக நயன்தாரா மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், மீண்டும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.