இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொடவை நியமனம் செய்ய ஒப்புதல் அளிக்கும் முடிவை மாற்றியமைக்கவில்லை என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பிற்பகுதியில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வேட்பு மனு மாற்றப்படவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை தரவரிசையின் அடிப்படையிலேயே உயர்ஸ்தானிகராக மொரகொடாவை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனாலும் நவம்பரில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வேட்பு மனு மாற்றப்படவில்லைமென இந்திய வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள், இலங்கையில் இயங்கும் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தன.
மேலும் மிலிந்த மொரகொட விரைவில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வார் என்றும் தாமதம் இலங்கையின் தரப்பில் இருப்பதாகவும் வட்டாரங்கள் சுட்டிக்காட்டி இருந்தன.
சீனாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் நிறுவனர் மிலிந்த மொரகொட ஆவார்.
மிலிந்த மொரகொட முதன்முதலில் 2000 ஆம் ஆண்டில் தேசிய நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் உள் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 2001 பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலிருந்து கொழும்பு கிழக்கின் அமைப்பாளராக போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மிலிந்த மொரகொடவின் தேர்தல் பிரச்சார தளம் அரசியல் அமைப்பு மற்றும் அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கையை வளர்ப்பதற்கும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கும் அரசியல், சமூகத்தில் நெறிமுறைகள் மற்றும் மதிப்புகளை மீட்டெடுப்பதற்கும் அழைப்பு விடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.