தென்னாபிரிக்காவின் கேப் டவுனின் டேபிள் மவுண்டனின் சரிவுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால பணியாளர்கள் 4 ஹெலிகொப்டரின் உதவியுடன் தீயை அணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் காட்டுத் தீயானது வேகமாக பரவி அருகில் இருந்த கல்லூரி கட்டடங்களுக்கும் பரவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் கேப்டவுன் கல்லூரியின் நூலகம் தீக்கிரையாகியுள்ளதுடன், சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேநேரம், தீ விபத்தில் சிக்கி இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து காரணமாக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வானில் கரும்புகை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.